மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் 6000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இன்று(25) எட்டினார்.
ஐபிஎல்லில் தனது 200வது ஆட்டத்தில்ல விளையாடிய தவான், பஞ்சாப் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் மகேஷ் தீக்ஷனாவின் பந்து வீச்சில் 6000 ரன்களை எட்டினார்.
IPL 15வது பதிப்பில் தவான் விளையாடிய 8 இன்னிங்ஸ்களில், தவான் முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அடித்த இரண்டு அரைசதங்கள் உட்பட 302 ரன்கள் எடுத்துள்ளார்.
மெகா ஏலத்தில் ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட தவான், தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை இரண்டு சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி 6,402 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்,
அதைத் தொடர்ந்து தவான் (6086), ரோஹித் சர்மா (5,725), டேவிட் வார்னர் (5,668), சுரேஷ் ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆகமொத்தத்தில் 200 வது IPL போட்டி, அதிக அரைச்சதம் அடித்த இந்தியர் , அதிக IPL ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் 2 வது வீர்ர் எனும் 3 சாதனைகளை தவான் ஒரேபோட்டியில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.