உலக கிண்ணத்தில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் -வரலாறு…!
உலக கிண்ண போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்ததே இல்லை எனும் நெடுநாள் குறை பாகிஸ்தான் ரசிகர்களால் சொல்லப்படுவது.
ஆனால் 2006 ம் ஆண்டு இதேபோன்றொரு பிப்ரவரி 19 இல் பாகிஸ்தான் அணி , இந்திய இளையோர் அணியை தோற்கடித்து இளையோர் உலக கிண்ணத்தை வென்று காட்டியது.
பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்பராஸ் அஹமேட் , இந்திய அணியின் தலைவராக ரவிகண்ட் ஷுக்லாவும் விளையாடினர்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் இளையோர் அணி ஜடேஜா மற்றும் சாவ்லாவின் சுழல் பந்துவீச்சை சந்திக்க முடியாது 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது, பாகிஸ்தானில் இப்போதைய சர்வதேச வீரர்களான சர்பராஸ் அஹமேட், நஸீர் ஜாம்ஷெட், இமாட் வாசிம், அன்வர் அலி ஆகியோர் அந்த அணியில் விளையாடியவர்கள்.
பதிலுக்கு இந்திய இளையோர் அணி விளையாடிய போது பாகிஸ்தான் இளையோர் அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. முதல் 6 விக்கெட்களும் 9 ஓட்டங்களுக்கு சரிக்கப்பட்டன. இறுதியில் 71 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது.
அன்வர் அலி 5 விக்கெட்களை அள்ளினார்.
இந்திய அணியில் புஜாரா, ரோஹித் சர்மா, ஜடேஜா, சாவ்லா, போன்ற பிரபல வீரர்களும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நிகழ்ந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கிறது.