அடுத்த பிரதமர் யார் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு …!

தேசிய பட்டியலிலிருந்து அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரை பிரதமர் பதவிக்கு கொண்டுவர ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களையும் போராட்டகார்ர்களையும் உரிய முறையில் கையாளாமல் நசுக்க அரசாங்கம் மேற்கொண்ட கேவலமான முயற்சியின் பயங்கரமான விளைவுகளை தற்போது அனைவரும் அனுபவித்து வருவதாக திருகோணமலை ஆனந்த மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு திருகோணமலை ஆனந்த தேரர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தருணத்தில் பொது மரியாதையும் அரசியல் அனுபவமும் உள்ள புத்திஜீவி ஒருவரை தேசிய பட்டியலிலிருந்து உடனடியாக நியமித்து பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதவிக்கு கரு ஜயசூரியவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.