ஜாஸ் பட்லருக்கு பந்து ஆடுகளத்திலிருந்து உள்நோக்கி வரும்போது கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.
இதை ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் எதிரணிகள் பயன்படுத்த தவறவிட்டன. இதனால் பட்லர் ஆரம்ப ஓவர்களில் நிலைபெற்று, அதற்குப் பிறகு, முன்காலை சரியாக விலக்கி, பெரியளவில் தாக்க ஆரம்பித்து, ரன்களை கொண்டுவந்தார்.
இந்தப் பாணி அவருக்குக் கைக்கொடுக்க ஆரம்பித்ததும், அவர் வேகப்பந்து வீச்சில் வழக்கமாக ஆடும் ரேம்ப் ஷாட்ஸை ஆடுவதையே நிறுத்தியிருந்தார்.
இன்று லக்னோ அணியின் சமீரா, ஆவேஷ்கான் பந்தை ஆடுகளத்திலிருந்து பட்லருக்கு உள்நோக்கி போகுமாறு வீசி தடுமாற வைத்தார்கள். கடைசியில் அவரை அவரின் வழக்கமான ரேம்ப் ஷாட்டிற்கு போக வைத்து ஆவேஷ்கான் கிளீன்-போல்ட் செய்து வழியனுப்பி வைத்தும்விட்டார்.
இப்படித் திட்டம்போட்டு வந்து, களத்தில் அணிகள் புத்திசாலித்தனமாய் செயல்படுவதைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தமான விசயம்!
Richards