பதக்கங்களை வென்று உலக கிண்ண போட்டிக்கு தெரிவாகியிருக்கும் வடக்கு வீராங்கனைகள்..!

பதக்கங்களை வென்று உலக கிண்ண போட்டிக்கு தெரிவாகியிருக்கும் வடக்கு வீராங்கனைகள்

காஷ்மிரில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா, கிளிநொச்சி [கிளி/மத்திய கல்லூரி மாணவி], மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த வீர வீராங்கனைகள் உலக கிண்ண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெற்ற உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் தெரிவுப் போட்டியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

இம் மாதம் 27ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமான போட்டிகள் 30 ஆம் திகதி இன்றுடன் முடிவுற்றிருந்தது. இப்போட்டியில் கிக்வபொக்சிங் போட்டியில் 4 தங்கப்தக்கமும் , 1 வெள்ளி பதக்கம்

மல்யுத்தப் போட்டியில் 2 வெள்ளி பதக்கமும் பெற்று மொத்தமாக 7 பதங்கங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளனர்.

குறித்த இப்போட்டியில் இலங்கை, இந்தியா, இத்தாலி போன்ற நாடுகள் பங்குபற்றியிருந்தனம குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் போட்டியில் தங்க பதக்கத்தினை பெற்ற வீர, வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை இந்தியாவில் இருந்து பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர் .

ஆசிய மிக்ஸ் பொக்சிங் சங்கத்தின்
தலைவரும் பயிற்றுனருமாகிய செல்வரத்தினம் நந்தகுமார் பயிற்றுவிப்பில் அவரது தலைமையில் குறித்த மாணவர்கள் போட்டிக்கு சென்று பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா :
கிக்பொக்சிங் 03 தங்கப்பதக்கம்

ஸ்ரீ.ஸ்ரீதர்சன்
கு.கிருசாந்தன்
ஜெயவர்த்தன இமேஷா

மல்யுத்தம் 01 வெள்ளிப்பதக்கம்
வி.தர்சிகன்

கிளிநொச்சி [கிளி/ மத்திய கல்லூரி]
கிக்பொக்சிங் 01 வெள்ளிப்பதக்கம்

முல்லைத்தீவு
கிக்பொக்சிங் 01 தங்கப்பதக்கம்
யோ. நிதர்சனா

#Siva

 

 

 

Previous articleகுஜராத்தை சாம்பியன் ஆக்கிய RCB யின் பழைய கூட்டணி..!
Next articleஆறு ஐபிஎல் 2022 மைதானங்களின் கியூரேட்டர்கள் மற்றும் கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு தரமான பரிசுத் தொகையை அறிவித்தார் ஜெய் ஷா..!