குட்டி சச்சினின் ஓட்ட வேட்டை -இன்று இரட்டை சதம் விளாசினார் .
இந்தியாவின் எதிர்கால சச்சின் என்றும், குட்டி சச்சின் என்றும் எல்லோராலும் புகழப்படும் இளம் வீரர் ப்ரித்வி ஷா இன்று அதிரடி இரட்டை சதம் விளாசியுள்ளார்.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக IPL போட்டிகளிலும், அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆரம்ப வீரராகவும் சொதப்பி ரசிகர்களதும் தேர்வாளர்களதும் வெறுப்பை சம்பாதித்திருந்த ஷா மீண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் விஜய் ஹசாரே தொடரில் பாண்டிசேரி அணிக்கு எதிராகவே ஷா இன்று இரட்டை சதம் விளாசினார்.
31 நான்கு ஓட்டங்களும், 5 சிக்ஸர்களும் அடங்கலாக 152 பந்துகளில் ஆட்டம் இழக்காது 227 ஓட்டங்களை ப்ரித்வி ஷா பெற்றுக்கொண்டார்.

இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
அத்தோடு 4 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற போட்டியொன்றில் ப்ரித்வி ஷா ஆட்டம் இழக்காது 89 பந்துகளில் 105 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.






