பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் சாம்பியனானார் நடால்..!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரஸில் நடைபெற்றது.

இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நோர்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி,பிரஞ்சு பகிரங்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நடால் அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடால் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Previous articleதிருமணங்களுக்காக வாடகைக்கு விடப்படும் பார்சிலோனா கால்பந்து மைதானம்..!
Next article1958-க்குப் பிறகு முதல் முறையாக வேல்ஸ் உலகக் கோப்பைக்குத் தகுதி..!