இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்க்கிறது.
“ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு பாகிஸ்தான் விரைவில் இலங்கை சுற்றுலா மேற்கொள்ளும் மற்றும் ஆசிய கோப்பை கொழும்பில் நடைபெறும்.
எனவே, இந்தப் போட்டித் தொடரை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்தார்.
புதிய சாதனையை நோக்கி நகரும் அர்ஜன்டீனா ..!
இந்த IPL சீசனில் அதிக சிக்சர்களை விளாசிய வீரரர்கள் ..!
இளவயதில் 10,000 ஓட்டங்கள் – ரூட் படைத்த சாதனைகள் ..!