“சிறிது காலத்திற்குப் பிறகு, எங்கள் முழு பலம் வாய்ந்த அணி இன்று விளையாடும், அவர்கள் ஐபிஎல் அனுபவத்துடன் சிறப்பாகப் போராடுவார்கள்” – லசித் மலிங்கா .
இலங்கையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டிக்கான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுகின்றார்.
மேலும், லசித் மலிங்க பந்துவீச்சுக்கு நிகரான முறையில் பந்துவீசி வரும் மத்திஷ பத்திரன மற்றும் நுவான் துஷார ஆகியோரும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய போட்டி தொடர்பில் லசித் மலிங்கா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இன்னும் சிறிது நேரத்தில் தனது முழு அணியையும் விளையாடவுள்ளதாகவும், ஐபிஎல் அனுபவத்தை மேம்படுத்தி போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
“இலங்கை – ஆஸ்திரேலியா இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடரை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சிறிது காலத்திற்குப் பிறகு நாங்கள் எங்கள் முழு பலத்துடன் விளையாடுவோம். ஐபிஎல் அனுபவத்தால் மேலும் வளர்த்து சண்டை போடுவார்கள். பரபரப்பான மற்றும் போட்டி நிறைந்த தொடரைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
Looking forward to the T20 and ODI series against Australia????
We’re playing with our full strength team after a while. Guys are more battle hardened with their IPL experience as well.
Fingers crossed for a exciting and competitive series?#SLvAUS— Lasith Malinga (@ninety9sl) June 7, 2022
YouTube காணொளிகளுக்கு ?
#SLvAUS தொடரில் காத்திருக்கும் சாதனைகள் ?