இலங்கையின் இளம் வீரருக்கு வந்த திடீர் சிக்கல்- அணியில் இருந்து உடனடி விடுதலை ..!
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுலாவுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் அணியில் இடம் பிடித்த இளம் வீரர் மதீஷ பத்திரண உபாதை காரணமாக T20 போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மதீஷ பதிரன இணைக்கப்பட்டு இருக்கவில்லை .
ஆயினும் T20 போட்டிக்கான அணியில் மதீஷ பதிரண ஆடுகின்ற பதினொருவர் அணியில் வாய்ப்பை பெறவில்லை .
இந்த நிலையிலேயே இப்போது உபாதை அடைந்திருப்பதாகவும் நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

YouTube link ?






