அவுஸ்ரேலிய வீரர்கள் இருவருக்கு உபாதை -தொடரிலிருந்து விலகல்..!

அவுஸ்ரேலிய வீரர்கள் இருவருக்கு உபாதை -தொடரிலிருந்து விலகல்..!

ஆஷ்டன் அகர் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் இலங்கைக்கு எதிரான 2 வது ஆட்டத்தின் போது காயம் அடைந்ததால், மீதமுள்ள ODI தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வனிந்து ஹசரங்கவின் இடுப்பு காயம் குறித்து, அவர் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடத் தகுதியுள்ளவரா என்பது குறித்து இன்னும் எந்தப் தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய வீரர்கள் பலர் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஸ்டோனிஸ், அஸ்டன் அகர் உபாதை அணிக்கு சிக்கலை அதிகரித்துள்ளது.

மக்ஸ்வெல்லின் அதிரடி காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றியை பெற்று இருந்தாலும் ,இரண்டாவது போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இரண்டு முக்கிய வீரர்கள் உபாதை அடைந்தமை அவர்களுக்கு நெருக்கடியை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

YouTube காணொளிகளுக்கு ?

 

 

 

Previous articleIPL பாணியில் அதிரடி நிகழ்த்தி நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து..!
Next articleபுதிய ICC தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை வீரர்கள்..!