இலங்கையை வெற்றிகொண்டது இந்திய மகளிர் அணி..!

இலங்கைக்கு எதிரான சொந்த மண்ணில் ஒரு டி20 போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இன்று (23) நடந்த முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இன்று (23) நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய பெண்கள் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 138 – (ஷபாலி வர்மா 31, ஹெர்மன்பிரீத் கவுர் 22, ஜெமிம் ரோட்ரிக்ஸ் 36, ரிஷா கோஷ் 11, பூஜா வஸ்த்ரகர் 14, தீப்தி சர்மா 17 *, இனோகா ரணவீர 30/3, ஓஷாதி ரணசிங்க 22/22)

இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 104 – (கவீஷா தில்ஹாரி 47*, ஹர்ஷிதா மாதவி 10, சாமரி அதபத்து 16, அமா காஞ்சனா 11, அனுஷ்கா சஞ்சீவனி 10*, ராதா யாதவ் 22/2)

ஆட்ட நாயகி விருது – ஜெமிமா ரோட்ரிக்ஸ்

 

 

Previous articleஇர்பான் பதானின் இந்திய உலக கிண்ண அணி..!
Next articleசனத்தின் கோரிக்கைக்கு செவிசாய்ப்போம்- இலங்கை கிரிக்கெட் ரசிகர்களே தயாராகுங்கள்..!