ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு ..!
சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது .
18 பேர் கொண்ட குழாமில் ஒருநாள் போட்டிகளில் காட்டிய திறமை அடிப்படையில் வான்டேர்ஸி அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இலங்கையின் இளம் வீர்ர் வெல்லாலகே மேலதிக வீர்ராக டெஸ்ட் அணியில் சேர்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம்.
அணித்தலைவராக திமுத் கருணாரத்ன செயல்படவுள்ளார்.
திமுத் கருணாரத்ன – கேப்டன்
பாத்தும் நிஸ்ஸங்க
ஓஷத பெர்னாண்டோ
ஏஞ்சலோ மேத்யூஸ்
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
கமிந்து மெண்டிஸ்
நிரோஷன் டிக்வெல்ல (WK)
தினேஷ் சண்டிமால் (WK)
ரமேஷ் மெண்டிஸ்
சாமிக்க கருணாரத்ன
கசுன் ராஜித
விஷ்வா பெர்னாண்டோ
அசித்த பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க
பிரவீன் ஜெயவிக்ரம
லசித் எம்புல்தெனிய
ஜெஃப்ரி வாண்டர்சே
காத்திருப்பு வீரர்கள்
துனித் வெல்லலகே
லக்ஷித ரஸஞ்சனா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 29 அன்று தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 8 முதல் ஜூலை 12 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தற்போது, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும் உள்ளது.







