LPL ஏலத்துக்கு முன்னதாகவே வெல்லாலகேவை வளைத்துப்போட்ட பிரபல அணி..!

எல்பிஎல் 2022 வீரர் ஏலத்திற்கு முன்னதாக இளம் வீரர் துனித் வெல்லாலகேவை யாழ் கிங்ஸ் வாங்கியது.!

இலங்கையின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் லங்கா பிரீமியர் லீக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருவதுடன், வீரர் ஏலமும் நாளை (5) மாலை நடைபெற உள்ளது.

இதேவேளை, ஒரு அணிக்கு ஆறு உள்ளூர் வீரர்களையும் மூன்று வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதன்படி தற்போதும் அணிகள் வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே வாங்கி வருகின்றன.

அண்மையில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இலங்கையின் இளம் வீரர் துனித் வெல்லலகேவை வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக வாங்குவதற்கான ஏற்பாடுகளை ஜப்னா கிங்ஸ் அணி மேற்கொண்டுள்ளது.

எல்பிஎல் போட்டியின் இரண்டு பருவங்களிலும் சம்பியன் பட்டத்தை வென்ற jaffna அணியின் பிரதான துருப்புச் சீட்டாக மாறிய வனிது ஹசரங்க இம்முறை அணியை விட்டு வெளியேறினார்.

தற்போது தனஞ்சய சில்வா மற்றும் வெல்லாலகே ஆகியோரை வீரர் ஏலத்திற்கு முன்னதாக கொள்வனவு செய்ய யாழ் கிங்ஸ் அணி ஏற்பாடு செய்துள்ளது.

 

 

 

 

Previous articleமந்தனாவின் அதிரடியில் அபார வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி..!
Next articleதலைமைப் பதவியிலிருந்து விலகிய பானுக – காலி அணி தக்கவைத்துள்ள வீரர்கள்..!