இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பணிப்பாளராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் டொம் மூடியை நியமித்துள்ளது .
மார்ச் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு அமையும் என்று ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்தது.
விளையாட்டுத்துறை அமைச்சர் அமைத்த டெக்னிகல் அட்வைசரி கொமிட்டி மூடியை நியமிப்பதற்கு பரிந்துரை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது .
மோடி 2007ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடியபோது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார் .
மூன்று ஆண்டுகளில் 300 வேலை நாட்கள் எனும் சுதந்திர அடிப்படையில் பணி நியமனம் அமைந்துள்ளது .
இந்த நிலையில் இவருக்கான சம்பளம் தொடர்பான விபரங்கள் வெளிவந்துள்ளன.ஆண்டுக்கு 200,000 அமெரிக்க டாலர்களுக்கு இவர் கடமையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.