மயிரிழையில் தவறிய ரோஹித்தின் அரிய உலக சாதனை- தொடரை வென்றது இந்தியா…!

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் Toss வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை குவித்தது. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கு இன்று ஓய்வு கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். லிவிங்ஸ்டன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அதிரடி நிகழ்தினார்.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரிஷப் பண்ட் ஒரு ரன், விராட் கோலி, ரோகித் சர்மா தலா 11 ரன்னில் அவுட்டாகினர். 31 ரன்களுக்குள் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு தலையிடி கொடுத்தார் ,அய்யர் நிதானமாக ஆட சூர்யகுமார் அதிரடியில் இறங்கினார்.

சூர்யகுமார் யாதவ் அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆயினும் முதலிரு போட்டிகளையும் வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது.

தொடர்ச்சியாக சர்வதேச ஆட்டங்களில் 19 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனைக்காக காத்திருந்த ரோஹித் சர்மாவின் உலக சாதனை இன்று தவறவிடப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த ரிக்கி பொன்டிங்கின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 17 ஓட்டங்களால் தோல்வியை தழுவியதன் காரணமாக இந்த சாதனை இன்று மயிரிழையில் தவறவிடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Previous articleT20 போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா..!
Next articleஉலக அணியை கிரிக்கெட் ஆட அழைக்கும் இந்தியா -ஆகஸ்டில் போட்டி..!