இங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடிக்கப் போராடும் இலங்கை வம்சாவளி …!

இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்கும் கனவுகளோடு இலங்கை வீரர் ஒருவர் போராடி வருகின்றார்.

இலங்கையைச் சேர்ந்த சவின் பெரேரா, இங்கிலாந்துக்கான டெஸ்ட் அறிமுகமாக தயாராகி வருவதாக அந்நாட்டின் பல இணையத்தளங்கள் குறிப்பிடுகின்றன.

இளம் வயதிலேயே இங்கிலாந்து சென்று கிரிக்கெட் விளையாடி வரும் வீரர் சவின். 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தற்போது கழகமட்டப் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் சவின், கடைசியாக விளையாடிய இன்னிங்சில் 72*, 121*, 11, 0, 18, 13, 29, 7, 84 மற்றும் 127 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது சவின் பெரேராவுக்கு 23 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Previous article145 ஆண்டுகால டெஸ்ட் உலக சாதனையை தவறவிட்ட இலங்கையின் இளம்வீரர்…!
Next article2022 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவின் போட்டிகள் -கங்குலி உறுதிப்படுத்தினார்..!