துனித் வெல்லாலகேவின் அற்புத பிடியெடுப்பு -ஆதிக்கத்தை தொடரும் இலங்கை…!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது, இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.
இன்று ஆட்டம் தொடங்கும் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கையின் துணைத் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் அற்புதமான சதத்தால் வண்ணமயமான இலங்கையின் இன்னிங்ஸ், ரமேஷ் மெண்டிஸின் வேகமான 45 ரன்களை உள்ளடக்கிய அதிரடியால் 360 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்காக மாற்றப்பட்டது.
அதன்படி இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இலங்கை அணியின் இன்னிங்ஸை இடைநிறுத்த இலங்கை அணித்தலைவர் தீர்மானித்தார், அதன்படி 508 ஓட்டங்கள் என்ற அபார வெற்றியை துரத்தும் நோக்கில் பாகிஸ்தான் வீரர்கள் களம் இறங்குகினர்.
எனினும் இதுவரை எந்த டெஸ்ட் அணியும் 500 ஓட்டங்களுக்கு மேல் இலக்கை துரத்தி வெற்றிபெறவில்லை, அதன்படி இலங்கை அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.
இதேவேளை, பிரபாத் ஜயசூரியவின் பந்தில் அறிமுக வீரர் டுனித் வெல்லாலகே எடுத்த அபாரமான கேட்ச் காரணமாக பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் விக்கெட்டாக அப்துல்லா ஷபீக் ஆட்டமிழந்தார். இன்றைய நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்கள் பெற்றது.
வீடியோவை கீழே பாருங்கள் ?
— Six Cricket (@Six6Cricket) July 27, 2022