புதிய டெஸ்ட் தரவரிசையில் இலங்கை வீரர்களின் நிலைகள்..!

புதிய டெஸ்ட் தரவரிசையில் இலங்கை வீரர்களின் நிலைகள்..!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் செயல்திறன் காரணமாக இரு நாட்டு வீரர்களின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் பாபர் அசாம் சமீபத்திய தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தரவரிசையில் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்திலும் எந்த மாற்றமும் இல்லை. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால், சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

அதன்படி தற்போது தரவரிசையில் தினேஷ் சந்திமால் 18வது இடத்தில் உள்ளார். முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அப்துல்லா ஷபிக் 23 இடங்கள் முன்னேறி 16வது இடத்தில் உள்ளார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கியுள்ளார். மேலும் முதல் 15 வீரர்களில் இடம்பிடித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 7 இடங்கள் சரிந்துள்ளார். இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 2 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். பந்துவீச்சாளர் தரவரிசையில் பிரபாத் ஜெயசூர்யா 11 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். மேலும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை பேட்ஸ்மேன்களது ICC தரவரிசை ?
திமுத் கருணாரத்ன – 8 (-1)
தினேஷ் சண்டிமால் – 18 (+11)
ஏஞ்சலோ மேத்யூஸ் – 21 (-7)
குசல் மெண்டிஸ் – 47 (+2)
நிரோஷன் டிக்வெல்ல – 48 (-4)
தனஞ்சய சில்வா – 49 (-2)
ஓஷத பெர்னாண்டோ – 58 (+11)
பாத்தும் நிஸ்ஸங்க – 68(-1)
குசல் பெரேரா – 75 (-2)
லஹிரு திரிமான்ன – 79(-1)
கமிது மெண்டிஸ் – 85

இலங்கை பந்துவீச்சாளர்களின் தரவரிசை இடங்கள் ?
லசித் அம்புல்தெனிய – 42(-3)
பிரபாத் ஜெயசூர்யா – 45 (+11)
கசுன் ராஜித – 49 (-5)
ரமேஷ் மெண்டிஸ் – 51 (-1)
லஹிரு குமார – 53 (-1)
அசித்த பெர்னாண்டோ – 55 (-1)
பிரவீன் ஜெயவிக்ரம – 61
விஷ்வா பெர்னாண்டோ – 65 (-2)
தனஞ்சய டி சில்வா – 87

 

 

Previous articleதுனித் வெல்லாலகேவின் அற்புத பிடியெடுப்பு -ஆதிக்கத்தை தொடரும் இலங்கை…!
Next articleபாகிஸ்தானை பந்தாடி அபார வெற்றிபெற்ற இலங்கை அணி..!