அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் -ரோஹித் சர்மா சாதனை…!

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2 வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை நேற்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெற்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்காவது இருபது ஓவர் போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தார். அதன்படி, இந்த மூன்று சிக்ஸர்களின் மூலம், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2 வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 427 இன்னிங்ஸ்களில் 477 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதில் டெஸ்டில் 64 சிக்ஸர்களும், ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களும், டி20யில் 163 சிக்ஸர்களும் அடங்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். 551 இன்னிங்ஸ்களில் 553 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் ஆனார். 508 சர்வதேச இன்னிங்ஸ்களில் 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

நியூசிலாந்து வீரர்கள் பிரண்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில் ஆகியோர் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது மற்றும் ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கைக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் சனத் ஜெயசூர்யா. ஜெயசூர்யா 651 இன்னிங்ஸ்களில் 352 சிக்ஸர்கள் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் ?
கிறிஸ் கெய்ல் – 553
ரோஹித் சர்மா – 477
ஷாஹித் அப்ரிடி – 476
பிரண்டன் மெக்கல்லம் – 398
மார்ட்டின் குப்டில் – 379
மகேந்திர சிங் தோனி – 359
சனத் ஜெயசூரிய – 352
இயன் மோர்கன் – 346
ஏபி டிவிலியஸ் – 328
ஜோஸ் பட்லர் – 275

 

 

 

 

 

Previous articleபங்களாதேஷ் மீண்டும் தோல்வி -ஒருநாள் தொடரும் ஜிம்பாப்வே வசம்…!
Next articleமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக புதிய உலக சாதனை படைத்தது இந்திய அணி..!