பாகிஸ்தானை பயமுறுத்திய நெதர்லாந்து – பரபரப்பான முதல் ஒருநாள் போட்டி..!
அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையில் பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணிக்காக தனது 7வது ஒருநாள் சதத்தை குவித்த ஃபகார் ஜமான், 109 ஓட்டங்கள் குவித்தார்.
பாகிஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் பாபர் அசாம் 74 , இன்னிங்ஸின் கடைசி பாதியில் வேகமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷதாப் கான் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக லோகன் வான் பீக் மற்றும் பஸ் டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
315 என்ற அபார இலக்கை துரத்த வந்த நெதர்லாந்து வீரர்கள் ஆட்டத்தை கைவிடவில்லை. நெதர்லாந்து 62 க்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆனால் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 62 மற்றும் டாம் கூப்பர் 65 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஆட்டத்தின் கடைசி நேரம் வரை போராட்டத்தை கைவிடாத ஸ்காட் எட்வர்ட்ஸ் 60 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து இன்னிங்ஸ் 298 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளாக பதிவானது. பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் 314-6 (50)
ஃபகார் ஜமான் 109(109), பாபர் ஆசம் 74(85), ஷதாப் கான் 48(28)*
பஸ் டே லீட் 42/2, லோகன் வான் பீக் 89/2
நெதர்லாந்து 298-8 (50)
ஸ்காட் எட்வர்ட்ஸ் 71(60)*, டாம் கூப்பர் 65(54), விக்ரம்ஜித் சிங் 65(98)
நசீம் ஷா 51/3, ஹாரிஸ் ரவூப் 67/3







