கிரிக்கெட் ஜாம்பவான்கள் போட்டியிடும் கரீபியன் பிரீமியர் லீக்கில் நிரோஷன் டிக்வெல்ல விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இம்மாதம் 30ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி CPL 2022 இல் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா பெற்றுள்ளார்.
நிரோஷன் டிக்வெல்ல Saint Lucia Kings அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இதற்கு அனுமதி வழங்குமா இல்லையா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
வனிது ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் இந்தப் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள போதிலும், எதிர்வரும் T20 உலகக் கிண்ணப் போட்டிகளை கருத்தில்கொண்டு அனுமதிப்பதில்லை என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் நிரோஷன் டிக்வெல்ல இலங்கை இருபதுக்கு 20 உலகக் கிண்ண அணியில் இடம் பெறாத பட்சத்தில், இந்த வருட CPL 2022 போட்டித் தொடரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை அவருக்கு கிட்டும் எனபதும் குறிப்பிடத்தக்கது.