ஜேம்ஸ் அன்டர்சன் படைத்திருக்கும் புதிய உலக சாதனை …!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் .
19 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்து 40 வயதான அன்டர்சன், தென் ஆபிரிக்க அணியுடனான போட்டியில் அந்த புதிய உலக சாதனையை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் சொந்த மண்ணில் மட்டும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியமையே அந்த சாதனையாகும்,
வரலாற்றிலேயே அதிக டெஸ்ட் (200) போட்டிகளில் விளையாடிய வீரராக சாதனை படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் இந்தியாவில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் .
ஆனால் சொந்த மண்ணில், இங்கிலாந்தில் 100வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகின்ற அன்டேர்சன் 100 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமையும் கவனிக்கத்தக்கது.