ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்ற 15ஆவது ஆசிய கிண்ண போட்டி தொடரில் நேற்று இந்திய, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இறுதி வரைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த இரு தரப்பு ஆட்டத்திலே இறுதியில் போராட்டத்திற்கு மத்தியில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வெற்றிகரமான தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.
குறிப்பாக தற்போதைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொகமட் ரிஸ்வான் ஆகியோரில் ஒருவர் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட வேண்டும் எனும் கோரிக்கை அவரிடமிருந்து முன்வைக்கப்படுகிறது.
வலது +இடது கை துடுப்பாட்ட வீரர்களாக ஆரம்ப வீரர்கள் அமைவது சிறந்தது, ஆகவே பாபர் அல்லது ரிஷ்வான் பாகிஸ்தான் அணிக்காக மூன்றாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடாதவர்களாக இருந்தால் அவர்கள் 7 முதற்கொண்டு 15 ஓவர்கள் வரையிலான ஓவர்களில் மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்பதே அவர் கருத்து.
மத்திய வரிசையில் ஹாபீஸ், சொயிப் மாலிக் ஆகியோர் இல்லாத காரணத்தால் மற்ற வீரர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள், ஆதலால் இந்த இருவரில் ஒருவர் மூன்றாம் இடத்திற்கு வருவது சிறந்தது எனும் கருத்தை அவர் முன்வைத்தார்.
அதே போன்று இளம் வீரர்களான ஹைதர் அலி மற்றும் ஆசிப் அலி ஆகியோருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுத்து அவர்களது்்திறமைக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் அவரிடமிருந்து வந்திருக்கிறது.
கிரிக்கெட் தள நேர்காணல் ஒன்றில் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.