2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளரான உமர் குலின் மனைவி டாக்டர் மரியம் நக்ஷ் தனது கணவரிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Pakistan k khilaf zara haat hola rakhna coach saab ?? congratulations ? https://t.co/VAmlAleWUz
— Dr Mariamnaqsh (@MariamNaqsh) August 30, 2022
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் ட்வீட்டிற்கு பதிலளித்த நக்ஷ், தனது வீரர்களை சூப்பர் 4 வரை முன்னேறியதற்காக வாழ்த்து தெரிவித்தார், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது தனது கணவரை மென்மையாக செயற்படுமாறு நக்ஷ் வலியுறுத்தினார்.
உமர் குல் இன் பந்துவீச்சு பயிற்றுவிப்பில் ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கிண்ணத்தில் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்திலும், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்திலும் சொற்ப எண்ணிக்கையில் இரு அணிகளும் கட்டுப்படுத்தி இலகுவாக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே முன்னாள் பாகிஸ்தான் வீரரும், இப்போது ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டுவரும் நிலையில் ஒரு வேடிக்கையான ஒரு வேண்டுகோளை அவரின் மனைவி விடுத்திருந்தமை ரசிகர்கள் இடையில் உற்சாகத்தை தோற்றுவித்திருக்கிறது.

எமது YouTube தளத்துக்கு ?






