இலங்கை அணியில் மாற்றம் -தனஞ்சய அணிக்கு வருகிறார் …!

சரித் அசலங்கவுக்குப் பதிலாக நாளை இந்திய அணியுடனான போட்டியில் தனஞ்சய டி சில்வாவுடன் விளையாட வாய்ப்பு இருப்பதாக இலங்கை டி20 கேப்டன் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவுக்குழுவுடன் கலந்துரையாடப்படும் எனவும் தசுன் ஷானக்க சற்று முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சரித் அசலங்காவுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா நாளை விளையாட வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் தரப்பில் அதிகம் எதிர்பார்கப்பட்ட நிலையிலேயே தசுன் ஷானக்க இதனை தெரிவித்துள்ளார் .

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (06) இலங்கை அணியை துபாய் மைதானத்தில் 7.30 க்கு சந்திக்கவுள்ளது, பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்தியா இலங்கையுடன் வாழ்வா சாவா போராட்டத்தில் ஆடும் என்பது குறிப்பிடதக்கது.

இலங்கை இறுதியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் நாளைய போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?

 

 

 

 

 

Previous articleபாகிஸ்தான் வீரர்களுடனான பரஸ்பர உறவு குறித்து புகழ்பாடிய கோலி..!
Next articleசென்னை அணியில் தசுன் ஷானக இணைப்பு…!