கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கிரிக்கெட் விளையாட்டின் வேகமான டி10 போட்டியின் 2022 பதிப்பு 10 ஓவர்கள் கொண்டதாக நவம்பர் 23 முதல் மூன்று வாரங்கள் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
2017ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தப் போட்டி, ஒரு போட்டி 90 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் வெகு விரைவில் பிரபலமடைந்துடன் இம்முறை 6வது முறையாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
மேலும், இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை பிரேவ்ஸ் அணியின் வழக்கமான வீரராக இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கேப்டன் தசுன் ஷனக இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை பிரேவ்ஸ் அணி அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு சென்னை பிரேவ்ஸ் அணியின் கேப்டனாக தசுன் ஷனா இருந்ததால், இந்த ஆண்டும் சென்னை வீரர்களை வழிநடத்தும் பொறுப்பு தசுனுக்கு இருக்கும் என கருதப்படுகிறது.
இது தவிர, இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி10 போட்டியில், நார்தர்ன் வாரியர்ஸ் அணியின் வழக்கமான வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீர்ர் வனிந்து ஹசரங்கவும் களமிறங்கவுள்ளார்.
ICON ANNOUNCEMENT ?
Sri Lankan All-Rounder @dasunshanaka1 rejoins the @chennaibravesae as their ICON! ?#AbuDhabiT10 #InAbuDhabi #CricketsFastestFormat pic.twitter.com/123yc8oqzC
— T10 League (@T10League) September 5, 2022
எமது YouTube தளத்துக்கு செல்ல?