சாம்பியனானது இலங்கை அணி …!

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை  அணி ஆறாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளது. சிங்கப்பூரை 63-53 என்ற கணக்கில் இன்று வீழ்த்தியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு Quater லும் சிங்கப்பூர் முன்னிலை பெற முடிந்தது. சிங்கப்பூர் முறையே 19-13 மற்றும் 30-27 என முன்னிலை பெற்றது.

அந்த இரு Quater லும் நடந்த அனைத்து  தவறுகளையும் தவிர்த்த இலங்கை வீரர்கள் மூன்றாவது சுற்றில் 46-38 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றனர். நான்காவது மற்றும் கடைசி சுற்றில், சிங்கப்பூர் மீண்டும் ஒரு தாக்குதல் பாணியில் ஈடுபட்டது, ஆனால் அது போட்டியை வெல்ல போதுமானதாக இல்லை.

ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட வரலாற்றில் இலங்கை அணி ஆறாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இதற்கு முன்னர் 1989, 1997, 2001, 2009 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், இலங்கை நான்கு முறை இரண்டாம் இடத்தையும் வென்றுள்ளது.

2023 உலக சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள இலங்கை, ஆசிய சம்பியனாக பங்கேற்கவுள்ளது.

இந்த அணியின் வெற்றியில் 44 வயதான தர்ஜினி சிவலிங்கத்தின் பங்களிப்பு மறக்கமுடியாதது.

 

எமது YouTube தளத்துக்கு செல்ல ?