இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி- அணியை மீட்கவரும் இருவர்…!

 

உள்ளக அறிக்கைகளின்படி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தங்களின் உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்து வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தேர்வுக்கு அவர்கள் இருவரும் தயாராக இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆசியக் கிண்ணப் போட்டி தொடருக்கு முன்னதாக உபாதைக்கு உள்ளாகி இருந்த பும்ரா மற்றும் ஹர்ஷால் பட்டேல் ஆகிய இருவரும் இந்திய குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இவர்கள் உபாதை தொடரும் பட்சத்தில் உலகக்கிண்ண அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இருவர் தொடர்பாகவும் மகிழ்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவின் டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளத்துக்குப் பிரவேசியுங்கள் ?

 

 

 

 

 

Previous articleசாம்பியனானது இலங்கை அணி …!
Next articleஇந்தியக் கொடி பிடித்த அஃப்ரிடி மகள்- விளக்கமளித்த அஃப்ரிடி…!