தோனி தலைமையிலான சென்னை அணியை பின்பற்றினோம்- வெற்றிக்குப் பின்னர் தசுன் சானக்க கருத்து..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்ற 15வது ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்திருக்கும் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
23 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியின் தலைவர் ஷானக, போட்டிக்குப் பின்னர் கருத்து தெரிவித்தபோது சென்னை அணியை பின்பற்றியதாக கூறினார்.
UAE யின் துபாய் மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெறுவது எப்படி என்பதை 2021 ம் ஆண்டு தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் ஆடி IPL கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டதை எங்களுக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்கின்ற கருத்து ஷானகவிடம் இருந்து வந்திருக்கிறது.
It’s celebration time!! ?? pic.twitter.com/rCxikSDxbA
— Dasun Shanaka (@dasunshanaka1) September 11, 2022
எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?