மந்தனாவின் அதிரடியில் மண்கௌவியது இங்கிலாந்து..!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது.
முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து, நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்களை பெற்றது, 143 எனும் இலக்குடன் ஆடிய இந்தியாவிற்கு அணியின் உதவித் தலைவி மந்தனாவின்
ஆட்டமிழக்காத அரைச் சதத்தின் உதவியுடன் இந்திய மகளிர் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 20 பந்துகள் மீதமிருக்க போட்டியை வென்றது.
மந்தனா ஆட்டமிழக்காது 53 பந்துகளில் 79 ஓட்டங்கள் பெற்று ஆட்டநாயகனாகியாக தெரிவு செய்யப்பட்டார், 3 போட்டிகள் கொண்ட தொடர் இப்போது 1-1 என வந்துள்ளது.
எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?