மைக்கல் ஹஸ்ஸியை வளைத்துப்போட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாகம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் டேவிட் சாகர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாட்ட பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரருமான மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோரின் ஆதரவைப் பெற்றுள்ளது.

2010 முதல் 2015 வரை இங்கிலாந்து ஆடவர் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர், உலகக் கோப்பைக்கு முந்தைய ஏழு போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் சுற்றுலாவில்  இணைவார்.

இதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த 47 வயதான ஹஸ்ஸி உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணிக்கான தயார்படுத்தலில் இணைவார்.

இங்கிலாந்து T20 அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மற்றும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சி குழாம் ?

தலைமை பயிற்சியாளர் – மேத்யூ மோட்
உதவி பயிற்சியாளர் – ரிச்சர்ட் டாசன்
உதவி பயிற்சியாளர் – கார்ல் ஹாப்கின்சன்
பயிற்சி ஆலோசகர் – மைக் ஹஸ்ஸி (உலகக் கோப்பை மட்டும்)
பயிற்சி ஆலோசகர் – டேவிட் சாகர்

 

YouTube link ?

 

 

 

 

 

 

Previous articleதரவரிசையில் மீண்டும் பின்னடைவை சந்தித்த பாபர் அசாம்…!
Next articleT20 உலக கிண்ணத்துக்கான பங்களாதேஷ் அணி விபரம் வெளியானது..!