T20 உலக கிண்ணத்துக்கான பங்களாதேஷ் அணி விபரம் வெளியானது..!

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மஹமதுல்லா ரியாஸை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கோப்பையிலும் வங்கதேச அணியை மஹ்மதுல்லா வழிநடத்தினார்.

காயம் காரணமாக கடந்த ஆசிய கிண்ண தொடரில் விளையாடாத லிட்டன் தாஸ் மற்றும் நூருல் ஹசன் ஆகியோர் மீண்டும் வங்கதேச அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆசியக் கிண்ண தொடருக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டிலிருந்து முஷ்பிகுர் ரஹீம் விடைபெற்றார். பங்களாதேஷ் அணியில் சபீர் ரஹ்மான், அபிஃப் ஹுசைன், முஷ்டாபிசுர் ரஹ்மான், மொசாதிக் ஹுசைன் ஆகியோர் அடங்குவர்.

பங்களாதேஷ் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 12 அணிகளுக்குள் தகுதி பெற்றுள்ளது, மேலும் அவர்கள் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் இரண்டு அணிகளுடன் தொடரில் போட்டியிடுவார்கள் .

பங்களாதேஷ் உலகக் கிண்ண அணி ?

ஷாகிப் அல் ஹசன், சபிர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் மிராஸ், அபிஃப் ஹுசைன், மொஸாடிக் ஹுசைன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நருல் ஹசன், முஷ்டாபிசுர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், தஸ்கின் அகமது, எபேதத் ஹுசைன், ஹசன் மஹ்முத், நஸ்ஜூம் மஹ்முத், நஸ்ஜூம் ஹுசைன்.

 

 

Previous articleமைக்கல் ஹஸ்ஸியை வளைத்துப்போட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி..!
Next articleஆசியக் கிண்ண வெற்றி குறித்து இலங்கை தலைமை தேர்வாளர் பிரமோதய விக்கிரமசிங்க கருத்து..!