ICC விருதுகளை வென்ற வீரர்கள் விபரம்…!

கடந்த ஆண்டு கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபிக்கான ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

கம்மின்ஸ் தனது அணிக்கு துடுப்பு மற்றும் பந்து இரண்டிலும் அற்புதமாக சேவை செய்துள்ளார், கடந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.

கடந்த ஆண்டில் கம்மின்ஸ் 24 போட்டிகளில் 244 ரன்களும், 59 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கம்மின்ஸுடன், அவரது சக வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ரேச்சல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.

ஐசிசி நேற்று பெயரிட்ட விருதுகளில், இந்தியாவின் விராட் கோலி, ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும் வென்றனர்.

கோஹ்லி கடந்த ஆண்டு 27 ஒரு நாள் போட்டிகளில் 1377 ரன்கள் குவித்துள்ளார், மேலும் அவர் ஒரு விக்கெட்டையும் 12 கேட்சுகளையும் பெற முடிந்தது.

கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கவாஜா 1210 ரன்கள் குவித்து தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் சாமரி அத்தபத்து ஐசிசி மகளிர் ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட அதே நேரத்தில், இந்தியாவின் சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக ஆண்டின் சிறந்த 20 -20 வீரர்களுக்கான விருதையும் வெற்றி கொண்டுள்ளார்.

 

 

Previous articleWPL போட்டிகளுக்காக இந்தியாவில் இருந்து சாமரிக்கு அழைப்பு…!
Next articleNo ball சர்ச்சை – மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் மாலிக்கை விலக்கிய அணி..!