அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசும் முன்னாள் CSK வீரர்…!

ரஞ்சிக் கோப்பையில் தமிழக வீரர் என்.ஜெகதீசன் தொடர்ந்து இரண்டாவது இரட்டைச் சதம் அடித்துள்ளார். சனிக்கிழமை சண்டிகருக்கு எதிராக ஒரு சிக்ஸருடன் 200 ரன்களை நிறைவு செய்தார்.

முன்னதாக, அவர் ரயில்வேக்கு எதிராகவும் ஆட்டமிழக்காமல் 245 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரஞ்சியில் அவரது துடுப்பு கர்ஜிக்கிறது.

அவர் சண்டிகருக்கு எதிராக 286 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 220 ரன்கள் எடுத்தார். அவரது சிறப்பான பேட்டிங்கால் தமிழகத்தின் ஸ்கோர் 400 ரன்களை கடந்துள்ளது.

ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் விளையாடியுள்ளார்.

 

 

 

 

Previous articleAus open tennis 2024- ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்ற போபண்ணா…!
Next articleஅடுத்த 4 ஆண்டுகளில் 13 ICC தொடர்கள் -விபரம் வெளியீடு…!