2025 ஆசிய கோப்பை டி20 முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், கடந்த ஆசியக் கோப்பை 50 ஓவர் வடிவத்தில் இலங்கையில் நடைபெற்றது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) 2026 டி20 உலகக் கோப்பைக்கு சிறப்பாக தயாராகும் வகையில் அடுத்த ஆசிய கோப்பையை டி20 வடிவத்தில் விளையாட முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2016 மற்றும் 2022 போட்டிகளுக்கு பிறகு டி20 முறையில் நடைபெறும் மூன்றாவது ஆசிய கோப்பை இதுவாகும்.
Cricbuzz இணையதளத்தின்படி, 2025 ஆசிய கோப்பைக்கான இடம் மற்றும் வடிவம் ACC இன் வரவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் இரண்டு நாட்களில் கூட்டம் நடைபெறவுள்ளது. 2025 ஆசிய கோப்பையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.