#INDvENG மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 39.4 ஓவரில் 122 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
ஒரு சமயம் வெறும் 50 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் சில அதிரடி காண்பித்து அணியை 100க்கு மேல் கொண்டு சென்றனர். இங்கிலாந்து தரப்பில் 10-ம் நிலை வீரர் மார்க் வுட் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டமிழக்காத 214, ஷுப்மான் கில் 91 மற்றும் சர்பராஸ் கானின் ஆட்டமிழக்காமல் 68 ரன்களின் உதவியுடன் இந்தியா 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
ஜெய்ஸ்வால் தனது 236 ரன்கள் இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை அடித்தார், இதன் மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.
இங்கிலாந்து பேஸ்பால் பாணியை ஏற்றுக்கொண்ட பிறகு, ஒரு அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இதுவே முதல் முறை. தற்போது இங்கிலாந்து ரன்களை விரட்டியடிக்கும் போது தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களின் அடிப்படையில் இந்தியா இதுவரை பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன், 2021ல் வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது.
434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்ததால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் இங்கிலாந்து இரண்டாவது பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 1934ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 708 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுவே முன்னைய சாதனையாக இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது.
ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.
அவர் தனது இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை அடித்து இந்தியாவுக்காக புதிய சாதனை படைத்தார் மற்றும் 28 ஆண்டுகளுக்கு முன்பு வாசிம் அக்ரம் படைத்த உலக சாதனையை சமன் செய்தார்.
இந்த தொடரில் அவர் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த 22 வயது பேட்ஸ்மேனின் இன்னிங்ஸின் சிறப்பம்சமாக, அவர் 41 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனை தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார். அவர் சர்பராஸ் கானுடன் (68 நாட் அவுட்) ஐந்தாவது விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தார்.
சர்பராஸ், தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி, இந்தப் போட்டியில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார். சுப்மான் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தின் சோகம்
இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் இன்னிங்சில் சதம் அடித்த பென் டக்கெட் முதலில் துடுப்பெடுத்தாடினார். இந்தியா எத்தனை ரன்கள் எடுத்தாலும் இங்கிலாந்து அணியால் சாதிக்க முடியும் என்று டக்கெட் கூறியிருந்தார், ஆனால் அவர் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
தேநீர் இடைவேளைக்கு சற்று முன் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலியை (11) எல்.பி.டபிள்யூ செய்து இங்கிலாந்துக்கு மற்றொரு அடி கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. அன்றைய கடைசி அமர்வின் முதல் ஓவரிலேயே ஜடேஜா ஒல்லி போப்பை வேட்டையாடினார். இங்கிலாந்து பேட்ஸ்மேன், மூன்று ரன்கள் எடுத்த நிலையில், முதல் ஸ்லிப்பில் இந்திய கேப்டனிடம் கேட்ச் ஆனார். இங்கிலாந்து 50 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் பவுண்டரிகளுடன் கணக்கைத் தொடங்கினர். ஆனால் ஜடேஜாவின் பந்தை ஸ்வீப் செய்யும் போது பேர்ஸ்டோவ் அவுட்டாகினார்.
ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 28 ரன்கள். ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து அணியை 50 ரன்களை கடந்தனர். ஆனால் இதைத் தொடர்ந்து ஜடேஜாவின் பந்தில் ரூட் எல்பிடபிள்யூ ஆனார். அவர் ஏழாவது முறையாக இந்த பந்துவீச்சாளருக்கு பலியாகினார். அடுத்த ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை ஸ்வீப் செய்த ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ என அறிவிக்கப்பட்டார். குல்தீப் தனது அடுத்த ஓவரில் ரெஹான் அகமதுவை முகமது சிராஜிடம் கேட்ச் ஆக்கினார். இதன் மூலம் இங்கிலாந்தின் ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 50 ரன்கள் ஆனது.
டாம் ஹார்ட்லியும் பென் ஃபாக்ஸும் சில பெரிய ஷாட்களை அடித்து 32 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து 82 ரன்களை எட்டியது. 10வது இடத்தில் வந்த வுட், 6 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் முக்கியமான ரன்களை குவித்து அணியை 100க்கு மேல் கொண்டு சென்றார். இறுதியாக ஜடேஜாவின் பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடியில் சிக்கினார்.
நான்காவது நாளில் இந்தியாவின் அபார பேட்டிங்
இந்திய அணி காலையில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விளையாடத் தொடங்கியது. கில் மற்றும் குல்தீப் யாதவ் (27) ஒரு மணி நேரம் இங்கிலாந்து விக்கெட் பெற அனுமதிக்கவில்லை மற்றும் நான்காவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
குல்தீப் தனது பார்ட்னரை விட ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார் மற்றும் டாம் ஹார்ட்லி பந்தில் சிக்ஸரை அடித்தார். இந்த இரண்டு பேட்ஸ்மேன்களுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலால், கில் தனது விக்கெட்டை இழக்க நேரிட்டது.
இந்தியாவின் மூன்றாம் நிலை பேட்ஸ்மேன் கில் தனது இன்னிங்ஸில் 191 பந்துகளை விளையாடி 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன்்91 ரன்களை விளாசியமையும்்குறிப்பிடத்தக்கது.