சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (23) ராஞ்சியில் நிறைவடைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்த இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளும் மதிய உணவுக்கு போட்டி நிறுத்தப்படும் முன்பே 112 ரன்களுக்குள் வீழ்ந்தன.
பின்னர் ரூட் தனது 31வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து இன்னிங்ஸை கட்டமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் நாள் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்திருந்தார்.
நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
6வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் இணைந்த பென் ஃபாக்ஸ் 113 (261) ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இங்கிலாந்து இன்னிங்ஸை பலப்படுத்தினார். ஃபாக்ஸ் 47 ரன்களில் வெளியேறினார்.
நாள் முடிவில், ஜோ ரூட் மற்றும் ஒல்லி ராபின்சன் 8வது விக்கெட்டுக்கு 57 (89) ரன்கள் முறியடிக்காத பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். ராபின்சன் 31 ரன்களுடன் உள்ளார்.
சாக் க்ரோலியுடன் இங்கிலாந்து இன்னிங்ஸை ஆரம்பித்த பென் டக்கெட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, குரோலி 42 ரன்கள் எடுத்தார். ஒல்லி பாப் ரன் அடிக்கவில்லை. ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களிலும் டாம் ஹார்ட்லி 13 ரன்களிலும் வெளியேறினர்.
பந்துவீச்சில் இந்தப் போட்டியில் டெஸ்ட் அறிமுகம்பெற்ற ஆகாஷ் தீப் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.