அபுதாபியில் இன்று நடைபெற்ற டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து தனது முதல் டெஸ்ட் வெற்றியை உறுதி செய்தது.
ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 155 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 263 ஓட்டங்களைப் பெற்றது.
அயர்லாந்தின் முதல் இன்னிங்ஸை விட 108 பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் 218 மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, 111 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த இலக்கை கடந்தது.
3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அயர்லாந்து இன்னிங்ஸுக்கு கேப்டன் பல்புர்னி ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.






