42 வது தடவையாக சாம்பியனாகிய மும்பை அணி..!

இந்தியாவில் இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ரஞ்சி கோப்பையை வெல்வது இது 42வது முறையாகும்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 224 பெற்ற நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விதர்பா அணி 105 பெற்றது.

மும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் எடுத்த நிலையில் விதர்பா அணிக்கு 538 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் போட்டியின் ஐந்தாம் மற்றும் இறுதி நாளான இன்று விதர்பா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 368 மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Previous articleகார் விபத்தில் சிக்கினார் திரிமான்ன..!
Next articleCSK அணியில் இணையும் யாழ் மண்ணின் மாலிங்க.!!