CSK அணியில் இணையும் யாழ் மண்ணின் மாலிங்க.!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவிய யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது வீரர் குகதாஸ் மாதுலனின் அபார பந்து வீச்சு இப்போது அவரை IPL வரை கொண்டு சேர்த்துள்ளது.

அந்த வீடியோவில் லசித் மலிங்கவை போன்று வீசிய சிறந்த யார்க்கர், லசித் மாலிங்கவின் பந்துவீச்சைப் போன்ற நிலையில் நேரடியாக விக்கெட்டைத் தாக்கியது.

இதனால் மாதுலனுக்கு CSK அணியில் இணைய அழைப்பு கிடைத்துள்ளது.

தற்போது, ​​இந்தியாவின் சென்னையில் தங்கியுள்ள அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று Net bowler ஆக அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பவுலராக பணியாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு முன்னால் பந்துவீசும் வாய்ப்பு யாழ் மண்ணை சேர்ந்த இந்த இளம் வீர்ருக்கு கிடைத்துள்ளமை மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

 

 

 

 

Previous article42 வது தடவையாக சாம்பியனாகிய மும்பை அணி..!
Next articleஅயர்லாந்தை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!