காயத்தால் அவதியுறும் வீரர்களை IPL ல் பங்கேற்க அனுமதி மறுக்கும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்..!

இலங்கை கிரிக்கெட் வீரர்களான துஷ்மந்த சமிர, மதிஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை இழக்க நேரிடும் என அறியவருகின்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இந்த சீசன் ஐபிஎல் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு தொடங்கும் நிலையில், முழு உடல் தகுதி இல்லாத மற்றும் காயங்களில் இருந்து மீண்ட வீரர்களை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பங்களாதேஷின் டெஸ்ட் அணியில் நீடிக்க வேண்டிய வனிந்து ஹசரங்க, குதிகால் காயத்துடன் பங்களாதேஷ் தொடரில் விளையாடினார்.

இலங்கையில் இருந்து இதுவரை மகேஷ் தீக்ஷன மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் மட்டுமே ஐபிஎல் அணியில் இணைந்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியுடன் ஐபிஎல் தொடங்குகிறது.

Previous articleICC தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த நிஸ்ஸங்க..!
Next articleபெயரை மற்றிய RCB அணி..!