இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டுவென்டி டுவென்டி போட்டி இன்று அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியிருக்கும் இந்திய அணி, டுவென்டி டுவென்டி தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது .
T20 போட்டிகளுக்கான தரவரிசை யில் இங்கிலாந்து முதலிடத்திலும் ,இந்தியா 2-வது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.