இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உயர் செயல்திறன் மையத்திற்கு (High performance) 3 புதிய நியமனங்களை செய்துள்ளது.
இதன்படி, தேசிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க, விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராக ஹஷன் அமரதுங்க, பிசியோதெரபிஸ்ட்டாக ஜொனாதன் போர்ட்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமரநாயக்க மூன்றாம் நிலை (நிலை 3) பயிற்சியாளராக உள்ளார், மேலும் 2008 முதல் 2015 வரை இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக பணியாற்றினார்.
மார்ச் 6ஆம் திகதி அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், இரண்டு வருடங்கள் அந்தப் பதவியில் பணியாற்றுவார் எனவும் கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிசியோதெரபிஸ்டாக நியமிக்கப்பட்ட ஜொனாதன் போர்ட்டர், இதற்கு முன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றியவர்.
இந்த நியமனங்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.