இலங்கை மகளிர் அணியுடனான தொடருக்குரிய தென்னாபிரிக்க அணி..!

இலங்கை மகளிர் அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க மகளிர் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

16 வயது விக்கெட் கீப்பர் கராபோ மெசோ அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் முதல் முறையாக நாட்டின் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

காயம் காரணமாக மூன்றாவது டுவென்டி 20 போட்டியில் விளையாடாத சோலி டிரையன், ஒருநாள் தொடரிலும் விளையாடவில்லை.

இருபதுக்கு 20 அணியில் இடம்பெற்றிருந்த Annerie Dercksen அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டெல்மி டக்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது, மேலும் ஒரு நாள் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு லண்டனில் தொடங்க உள்ளது.

இலங்கைக்கு எதிரான மகளிர் ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி:

லாரா வோல்வார்ட் (c), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா, மரிசான் கேப், அயபோங்கா காக்கா, மசபாடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், கராபோ மெசோ, நோன்குலுலேகோ துமி சேகுகுனே டெல்

 

 

Previous articleT20 Worldcup இலக்கு -IPL தொடரிலிருந்து விலகினார் ஹசரங்க..!
Next article17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த விராட் கோலி!