T20 Worldcup-மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தகுதி…!

இந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது

ஐக்கிய அரபு இராச்சியத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர்கள் தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற முடிந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 134 மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை மகளிர் அணிக்கும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

 

 

Previous articleT20 Worldcup- தோல்வியின்றி அரையிறுதியில் நுழைந்த இலங்கை மகளிர் அணி…!
Next articleMaxwell தொடர்பில் சர்ச்சையான கருத்து தெரிவித்த பார்திவ் படேல்..!