2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்காக நியமிக்கப்பட்ட போட்டி அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு 26 போட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
அதிகாரிகளில் 6 போட்டி தீர்ப்பாளர்கள் உட்பட 20 நடுவர்கள் அடங்குவர்.
2022 இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய இலங்கையின் குமார் தர்மசேன மற்றும் அந்தப் போட்டியின் போட்டி தீர்ப்பாளராக பணியாற்றிய ரஞ்சன் மடுகல்ல ஆகியோர் போட்டி அதிகாரிகளாக உள்ளனர்.
20 நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள 9ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகள் 9 மைதானங்களில் 28 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 55 ஆகும்.
ICC ஆடவர் T20 உலகக் கோப்பை 2024க்கான போட்டி அதிகாரிகள்:
நடுவர்கள்:
கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேன, கிறிஸ் கஃபனே, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்லாஹுடியன் பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், பால் ரீஃபெல், லாங்டன் சா ருசரே , அலெக்ஸ் வார்ஃப், ஜோயல் வில்சன் மற்றும் ஆசிஃப் யாகூப்.
போட்டி தீர்ப்பாளர்கள்:
டேவிட் பூன், ஜெஃப் குரோவ், ரஞ்சன் மதுகல்ல, ஆண்ட்ரூ பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்.