பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது இலங்கை பந்துவீச்சாளர்களுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பயிற்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரம் இவ்வாறு கூறினார்.
“அவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அவர்களின் திறமைகளை கண்டு வியக்கிறேன். அந்தத் திறனை நன்கு வளர்த்துக் கொண்டால், இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை அடைய முடியும்.
இம்முறை 20-20 போட்டியில் இலங்கையின் பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சுத்திறன் மற்றும் துடுப்பாட்டத்திறனைக் கொண்டு இலகுவாக அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என நினைக்கிறேன் என அவர் அங்கு கூறினார்.