இந்திய அணியால் டி20 உலகக்கோப்பை ஜெயிக்கவே முடியாது.. விளாசும் ரசிகர்கள்

இது மிகப்பெரிய தவறு.. இந்திய அணியால் டி20 உலகக்கோப்பை ஜெயிக்கவே முடியாது.. விளாசும் ரசிகர்கள்

2024 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லவே முடியாது என சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து உள்ளனர். டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 2 அன்று துவங்க உள்ளது. இந்திய அணி ஜூன் 5 அன்று தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு இன்னும் 20 நாட்களே உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பை காண பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் ஆனால் இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார்கள். ஐபிஎல் தொடர் வரும் மே 26 அன்று தான் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னரே இந்திய அணி ஒன்று கூடி பயிற்சி மேற்கொள்ள முடியும்.

அதுவரை ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத அணிகளை சேர்ந்த சில இந்திய வீரர்கள் மட்டுமே டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். ஆனால், அப்படி வீரர்களை பிரித்து அனுப்புவதால் எந்த பயனும் இல்லை. அணியின் 15 வீரர்களும் ஒன்றாக இணைந்து வலைப் பயிற்சி மற்றும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடினால் தான் அணியின் வீரர்களின் ஃபார்ம் மற்றும் சாதக, பாதக அம்சங்களை கண்டறிய முடியும்.

தற்போது இலங்கை டி20 அணி முதல் அணியாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு தங்கி இருபது நாட்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள் டி20 சர்வதேச இருதரப்பு டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. அதன் மூலம் வீரர்களின் ஃபார்ம், அணியில் இருக்கும் தவறுகளை சரி செய்ய அவர்களுக்கு அவகாசம் கிடைக்கும்.

ஆனால், இந்திய அணி வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சியும் செய்யவில்லை, மற்ற அணிகளுடன் சேர்ந்து டி20 தொடரிலும் விளையாடவில்லை. அதற்கு பதிலாக தனித்தனி அணியாக பிரிந்து ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார்கள். இதன் மூலம் இந்திய வீரர்களுக்கு எந்த பயனும் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

Previous articleT20 Worldcup- பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு..!
Next articleசிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் தோனியா? வெளியேறும் ஃபிளமிங்.. தல கட்டுப்பாட்டில் சென்னை டீம்