LPL 2024 வீரர்கள் ஏலம் இன்று …!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலத்திற்கு 420 வீரர்கள் வழங்கப்படவுள்ளனர்.

இதில் 154 வீரர்கள் இலங்கை வீரர்கள், மீதமுள்ள 266 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள்.

போட்டியின் வீரர் ஏலத்தில் 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 266 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டதாக போட்டியின் இயக்குனர் சமந்தா தொடங்வெல தெரிவித்தார்.

வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதுடன், நண்பகல் 12.00 மணிக்கு ஏலம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியதன் காரணமாக இரண்டு அணிகளின் உரிமையாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, காலி மற்றும் தம்புள்ளை அணிகள் தற்போது இரண்டு புதிய உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளன. கண்டி அணியின் உரிமையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது.

 

 

 

Previous articleIPL 2024 பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!
Next articleT20 Worldcup- ஆஸி அணியில் இணைக்கப்பட்ட மேலதிக வீரர்கள்..!